உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் – 16 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தை குறிவைத்து தற்கொலைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில்  05 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 பொதுமக்கள் உள்ளடங்களாக 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத சடங்குகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் குழுவும் தாக்குதல்களை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்