ஆஸ்திரேலியா

ஆப்கான். தூதரகத்தை மூடுகிறது ஆஸ்திரேலியா!

கன்பராவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் செயல்பாடுகளை நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் ஆட்சியால் நியமிக்கப்பட்ட தூதுவர்களை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தலிபான்களை ஆப்கானிஸ்தான் மக்கள் சட்டப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலிருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அஞ்சுகின்றனர்.”

இவ்வாறு ஆஸ்திரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
தலிபான்களின் ஜனநாயக விரோத மற்றும் வன்முறைக் கொள்கைகள் காரணமாக ஆப்கானிஸ்தான் அதிகரித்து வரும் சர்வதேச தனிமைப்படுத்தலை எதிர்கொள்கிறது.

பல நாடுகள் ஆப்கானிஸ்தான் அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.

அதேவேளை கன்பராவிலுள்ள தூதரகம் மூடப்படுவது தொடர்பில் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் சமூகத்தை சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித