உலகம் செய்தி

எத்தியோப்பியாவில் மண்சரிவில் சிக்குண்டு 64 பேர் பலி – மேலும் பலர் புதையுண்டதாக தகவல்

தெற்கு எத்தியோப்பியாவின் காமோ (Gamo) வலையத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்குண்டு 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 128 பேர் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சேற்றில் புதைந்து கிடந்ததாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக
அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மக்கள் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி