உலகம் செய்தி

சூடான் நைல் நதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழப்பு

வடக்கு சூடானில் நைல் நதி மாநிலத்தில் பயணிகள் படகு மூழ்கியதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்,

மேலும் பலர் காணாமல் போயுள்ளதா சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சூடானின் இறையாண்மை கவுன்சில் உறுதிசெய்தது.

சுமார் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன சுமார் 12 பேரை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிவில் பாதுகாப்பு உதவி இயக்குநர் ஜெனரல் பொலிஸ் மேஜர் குராஷி ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மூழ்கிய படகு, புதன்கிழமை மாலை, தைபா அல்-கவாட் மற்றும் டெய்ம் அல்-கராய் கிராமங்களுக்கு இடையே பயணித்தபோது, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30-35 பயணிகளை ஏற்றிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

சூடான் தலைநகரான கார்ட்டூமிலிருந்து  குழுக்கள் அனுப்பப்பட்டு, அனைத்து சிவில் பாதுகாப்பு குழுக்களும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சூடான் மருத்துவ நிபுணர்கள் சங்கம்  இந்த சம்பவத்தை நாட்டின் நதி போக்குவரத்தின் பலவீனம்  எனக் குற்றம் சுமத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி