ஐரோப்பா

உக்ரைனுக்கு விரைந்த ஆண்டனி பிளிங்கன் – ஸெலன்ஸ்கியுடன் ஆலோசனை

உக்ரேன் அதிபருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆலோணனை நடத்தவுள்ளார். பொலந்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு இருந்து ரயிலில் அண்டை நாடான உக்ரைனுக்கு இன்று காலை சென்றடைந்ததாக (14) தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வித முன்னறிவிப்பு இன்றி உக்ரைனுக்க திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது, உக்ரைன் அரசுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனியர்களுக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

உக்ரேனுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர் (S$82.6 பில்லியன்) பெறுமானமுள்ள ராணுவ உதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.

Ukraine claims territorial gains as Blinken pledges support 'for as long as it takes' – Euractiv

உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் உக்ரேனின் தற்காப்பை எவ்வாறு வலுப்படுத்தும் என்பது குறித்து பேச திரு பிளிங்கன் கியவ் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து அவற்றை முறியடிப்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா அனுப்பிவைக்கும் தொலைதூர இலக்குகளை எட்டும் ஏவுகணைகளும் வான் தற்காப்புச் சாதனங்களும் உக்ரேனைக் கூடிய விரைவில் சென்றடையும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

உக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆதரவு என்றென்றும் இருக்கும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உட்பட மற்ற அதிகாரிகளுக்கு பிளிங்கன் உறுதி அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்