உலகம்

அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு – ரஷ்யா, சீனாவின் ஆதரவில் கூடும் ஐ.நா சபை!

வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை நாம் செய்யக்கூடிய காலம் வரை” வொஷிங்டன் வெனிசுலாவை வழிநடத்தும் என ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் அங்கு எவ்வாறான அரசியலை கொண்டுசெல்வார் என்பது தொடர்பில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில்  ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன்  15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலின் கூட்டத்தை நடத்துமாறு பல நாடுகளின் இராஜதந்திரிகள்  வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே நாளை தினம் ஐ.நா கவுன்சில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அக்டோபர் மற்றும் டிசம்பரில் இரண்டு முறை கூடியிருந்தது. இருப்பினும் ட்ரம்ப் ஐ.நாவின் சட்டவிதிகளை மீறி தாக்குதலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்