இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
வரிச்சுமை குறையும் என நாடு காத்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பின், வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. வற் உள்ளிட்ட நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் குறைக்க முடியாது போயுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளையும் அவரால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், வரிச்சுமையைக் குறைக்கப்பட வேண்டுமாயின், கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி