இலங்கை

கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ம் திகதி திருவிழா ஆரம்பமாகி ஜூலை 3ம் திகதி மகா உற்சவம் நடைபெற்று, மறுநாள் மாணிக்க கங்கையில் நீர் வெட்டப்பட்ட பின்னர் நிறைவடையும்.

இதேவேளை, திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தங்க வைப்பதற்காக மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை பொலிஸார் கோரியுள்ளனர்.

அதன்படி, மூன்று பாடசாலைகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும்> விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி திறக்கப்படும் என மாவட்ட கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்