ஐரோப்பா

பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை – 200 மில்லியன் யூரோக்களை செலவிட திட்டம்

பிரான்ஸ் நாட்டில் தற்போது அளவுக்கு அதிகமாக ஒயின் எனும் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது.
இதனால் அங்கு ஒயின் உற்பத்தியினை நிறுத்த சொல்லி அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மதுபிரியர்கள் தற்போது ஒயின் பக்கத்தில் இருந்த தங்கள் பார்வையை பீர் பக்கம் திரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் ஒயின் தொழிற்சாலைகள் வேறு தொழில் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஒயின் பாட்டில்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு அந்நாட்டு மதிப்பில் 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.

ஐரோப்பிய ஆணையம் மதுபியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒயின் அருந்தும் பழக்கமும் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சரிவானது இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்சில் 15 சதவீதம் என குறைந்துள்ளது. அதே சமயத்தில் உலகின் மிகப்பெரிய ஒயின் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதவீதம் வரை ஒயின் உற்பத்தி உயர்ந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்