இலங்கை செய்தி

ஒரு வாக்காளருக்கு 109 ரூபாயே செலவிட முடியும் – விஷேட வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவையே செலவிட முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையே இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை