வட அமெரிக்கா

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்- 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி, அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில், அரிசோனாவைச் சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால், 43, ரஸ்டின் ராண்டால், 48, ட்ரூ கிம்பால், 44 மற்றும் கிரஹாம் கிம்பால், 12 என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்