லண்டன் முழுவதும் திடீர் சோதனை – ஃபெராரி உள்ளிட்ட 90 வாகனங்கள் பறிமுதல்
லண்டன் முழுவதும் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் , 8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காப்பீடு இல்லாத மற்றும் சமூக விரோத வாகன ஓட்டுதலுக்கு எதிராக பொலிஸார் இன்று திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதில் 3.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரிதான ஃபெராரி மான்சா SP2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னறிவிப்பு ஏதுமின்றி, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கார்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய அதிகாரங்களின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைட் பார்க், கென்சிங்டன் மற்றும் செல்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் 120 பொலிஸார் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




