உலகம் செய்தி

18 ட்ரோன்களை இடைமறித்து அழித்தது சவூதி!

சவூதி அரேபியாவின் Saudi Arabia கிழக்குப்பகுதியில் ஊடுருவிய பதினெட்டு ஆளில்லா விமானங்களை drones வெற்றிகரமாகத் தடுத்து அழித்தாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதியை நோக்கி வான்வழித் தாக்குதல் முயற்சிகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

குறிப்பாக, ஷேபா எண்ணெய் வயலை இலக்கு வைத்துச் சென்ற ஒரு ட்ரோன் வடக்கு எல்லைப்பகுதியில் இடைமறித்துத் தகர்க்கப்பட்டது.

சவூதி பாதுகாப்புப் படைகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது நாட்டின் முக்கிய எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியைக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வான்வெளி அச்சுறுத்தல்களை முறியடித்துத் தனது தேசிய பாதுகாப்பை நிலைநாட்ட சவூதி அரேபியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி