இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் இலங்கை சாதனை: சர்வதேசப் பட்டியலில் 18-வது இடம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் இலங்கை, சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஊடகமான TTW – Travel and Tour World வெளியிட்டுள்ள “2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 50 பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்” என்ற மதிப்புமிக்க சர்வதேசப் பட்டியலில் இலங்கை 18-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்படி சர்வதேசப் பட்டியலில் இந்தியா, பிரான்ஸ், பெரு, ஸ்பெயின் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் தொன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக இலங்கை 18-வது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ராமர் பாலம்’ போன்ற ஆன்மீக மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய தூரப் பயண எல்லைக்குள் சிகிரியா போன்ற யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள், நுவரெலியா மற்றும் கண்டியின் பனிமூட்டமான தேயிலைத் தோட்டங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் என அனைத்தையும் ஒரே நாட்டில் அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதால் இலங்கைக்கான சுற்றுலாத்துறை கேள்வி அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாப் பயணிகள் எளிதாக நாட்டுக்குள் வருவதற்கான விசா விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த கால இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி, இலங்கை பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளதாகவும், மக்களின் இன்முகத்துடனான விருந்தோம்பல் பயணிகளைப் பெரிதும் கவர்வதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக அமையும் என சுற்றுலாத் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!