மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக!
தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார். இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே […]













