தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!
தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]













