ஸ்கொட்டிஷில் பெரும் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல் – பலர் கைது
ஸ்கொட்டிஷ் பிரீமியர்ஷிப் பட்டத்தை செல்டிக் எப்.சி (Celtic F.C) அணி வென்றதைத் தொடர்ந்து, இரசிகர்கள் Glasgow நகரில் திரண்டபோது பெரும் கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்ட்ஸ் (Hearts) அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வெற்றியை கொண்டாட, சுமார் 3,000 செல்டிக் ரசிகர்கள் ட்ரொங்கேட் (Trongate) பகுதியில் கூடியுள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவ அவசர உதவியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்ததாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர், நிலைமையை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர்புடையவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் முழுவதும் பெருமளவில் மதுபானங்களும் பட்டாசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பெரும்பாலான இரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டாலும், சிலர் கடுமையான வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். காவல்துறையினர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என உதவி தலைமை காவலர் Mark Sutherland தெரிவித்துள்ளார்.





