இலங்கை செய்தி

கிழக்கில் காணி பாதுகாப்புக்கு விசேட குழு நியமனம்!

  • May 22, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார […]

இலங்கை செய்தி

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய உரை குறித்து சுமந்திரன் விளக்கம்

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என்றும், அரசு முன்னெடுக்கும் சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, தவறுகளைச் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்காது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை குறித்துச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி அநுரகுமார […]

இலங்கை செய்தி

வலி. வடக்கில் ஐந்தாவது வாரமாக வீதியில் இறங்கி போராடும் மக்கள்!

  • May 22, 2026
  • 0 Comments

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் தங்களின் பூர்வீகக் காணிகளை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் , இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாக வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று […]

ஐரோப்பா

யுரேனியம் கொண்ட ஏவுகணையை ஏவிய ரஷ்யா : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

  • May 22, 2026
  • 0 Comments

கடந்த மாதம் செர்னிஹிவ் (Chernihiv) மாகாணத்தில் ரஷ்யா ஏவிய குறைக்கப்பட்ட யுரேனியம் கொண்ட  ஏவுகணையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சியின் அளவு அதிகரித்துள்ளதாக  உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) குறிப்பிட்டுள்ளது. இதனால்  ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரையில் ஏதேனும் சிதைவுகளையோ அல்லது வெடிக்காத வெடிமருந்துகளையோ கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு SBU வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நேட்டோவிற்கான ஆதரவு செலவீனங்கள் சமமாக பகிரப்படவில்லை என  அதன் தலைவர் மார்க் ரூட்டே குற்றம் சாட்டியுள்ளார். […]

இந்தியா

இந்தியாவில் வைரலான கரப்பான் பூச்சி கட்சி!

  • May 22, 2026
  • 0 Comments

இந்தியாவில் கரப்பான் பூச்சி  இயக்கம் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) – சோம்பேறிகள் மற்றும் வேலையற்றோரின் குரல்’ என்ற இந்த இயக்கம், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புப் பட்டதாரியும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னாள் சமூக ஊடக வியூக நிபுணருமான அபிஜீத் திப்கே என்பவரால் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்,  இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், எக்ஸ்-எக்ஸ் (X) தளத்தில் 200,000 பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது. […]

உலகம்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ரூபியோ : வரலாற்றில் இதுவே முதல் முறை!

  • May 22, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வரும்  23 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணத்தின்போது, ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், எரிசக்தி, வர்த்தகம் […]

இலங்கை

மாணவர்கள் மத்தியில் பரவும் மூளைய்க்காய்ச்சல் !! பெற்றோரின் கவனத்திற்கு!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில்  மூளைக்காய்ச்சல் பரவி வருவதாக தலைமை நோய்ப்பரவலியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பில் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் தெனியாயாவில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல் தற்போது பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். அதன்படி, தியதலாவாவில் 28 நோயாளிகளும், வெலிமடவில் 13 நோயாளிகளும், ரிக்கிளகஸ்கடியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கல்வித்துறை அறிஞர்களுடன் பிரதமர் சந்திப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • May 22, 2026
  • 0 Comments

” 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது. மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் […]