இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்துவம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் பொதுவான இலக்குகளை அடைவதற்காக இணைந்து செயல்பட இச்சந்திப்பின்போது ஒப்புக்கொண்டனர்.





