கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு: விரைவில் அதிரடி சட்டம்!
“மக்கள் ஆணைக்கு எதிராக செயல்படமாட்டோம். எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் கலாசாரத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் […]













