ஐரோப்பா

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி புகைப்பிடிப்பதை நிறுத்தினார் 

இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தான் புகைப்பிடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

49 வயதான ஜோர்ஜியா மெலோனி, பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான ஒரு முறைசாரா உரையாடலின்போது, ​​தான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஐரோப்பியத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, ​​மெலோனி, “விழிப்புடன் இருப்பதற்கு எனக்குக் காபி தேவை” என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் நகைச்சுவையாக சிகரெட்டுகளைக் குறிப்பிட்டார்.

அதற்கு இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, நான் கடந்த மாதம் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று பதிலளித்தார்.

இதற்காக, ஜப்பான் பிரதமரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும் அவரைப் பாராட்டினர்.

தான் 13 ஆண்டுகளாக புகைப்பிடிப்பதை விட்டு விலகி இருந்ததாகவும், ஆனால் பின்னர் மீண்டும் அப்பழக்கத்திற்கு ஆளானதாகவும் அவர் கடந்த கால நேர்காணல்களில் கூறியுள்ளார்.

இந்நிலையில், 2025 ஒக்டோபரில் எகிப்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் காணொளி ஒன்றை துருக்கிய ஊடகங்கள் மீண்டும் பகிர்ந்துள்ளன.

அந்தக் காணொளியில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், மெலோனிக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துமாறு அறிவுரை கூறுவது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்