உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் வழங்கப்படும் ‘மயோனைஸ்’ (Mayonnaise) மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பச்சை முட்டையிலிருந்து (Raw Egg) தயாரிக்கப்படும் மயோனைஸ் எளிதில் பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதியை மீறி மயோனைஸ் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேசன் தெரு (Mason Street) பகுதியில் நேற்றிரவு இரவு உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் (West Midlands Police), தீயணைப்பு சேவை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் […]
ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் தற்போது எட்டு வாரங்களைக் கடந்து நீடிக்கிறது. 57 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் அவர் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். இப்பாடல் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர், அப்பாடல் பற்றி பேசும்போது நடிகை தமன்னாவை, […]
விஜய் அரசியல் களத்துக்கு வந்தது முதலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றார். தேர்தல் பரப்புரைகளின்போது பல சவால்களை எதிர்கொண்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்பும் அவருக்கான சிக்கல் ஓயவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வண்ணம் பூசப்பட்டு பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருச்சியில் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பீட்டா இந்தியா அமைப்பு , தவெக தலைவர் தலைவர் […]
பிரித்தானியாவில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வரும் உள்ளுராட்சி தேர்தலில் அக்கட்சி படுதோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாக தொழிற்கட்சி தலைவராக எட் மிலிபான்ட் (Ed Miliband) தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது. மிலிபான்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, லார்ட் மாண்டல்சன் (Lord Mandelson) அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டதை அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இருப்பினும், மிலிபான்டின் முந்தைய தலைமைப் பதவி மற்றும் 2015 ஆம் […]
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் துருக்கி இணையக்கூடும். துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். மேற்படி தூய்மைப்படுத்தும் பணிகளைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதில் பங்கேற்பதில் துருக்கிக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாடுகள் ஏதேனும் புதிய மோதல்களில் சிக்கினால், தனது நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை […]
“இவ்வருடத்துக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து ஈழத்து மக்களாக நினைவுகூர வேண்டும்.” இவ்வாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அறைகூவல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் […]
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மறுதினம் (27) வெளியாகும் என படக்குழு poster வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘உன்னை நம்பி’ என்ற பாடல் இசைஞானி இளையராஜா இசையில் வெளியாகவுள்ளது. மேலும், டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘லெனின் பாண்டியன்’ படத்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.