உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணையில் துருக்கி களமிறங்கும்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் துருக்கி இணையக்கூடும்.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேற்படி தூய்மைப்படுத்தும் பணிகளைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதில் பங்கேற்பதில் துருக்கிக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாடுகள் ஏதேனும் புதிய மோதல்களில் சிக்கினால், தனது நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சிக்கல்கள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகமாகத் தீர்க்கப்படலாம் என்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!