இந்தியா

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, பாகிஸ்தானிலும் சில இடங்களில் போராட்டங்கள் […]

உலகம்

ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார். ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

செய்தி

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப் பார்வை: விசா காலம் நீடிப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட […]

உலகம்

4 வாரங்களுக்கு போர் நீடிக்கும்: ஈரானில் 48 தலைவர்கள் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட […]

உலகம் செய்தி

போர் உக்கிரம்: ஈரான் முன்னாள் ஜனாதிபதி பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவரும் அவரது பல பாதுகாப்புப் படையினரும் பலியாகியுள்ளனர். அதேவேளை, ஈரான்மீதான தாக்குதலை சீனா, ரஷ்யாh, வடகொரியா உள்ளிட்ட நட்பு நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

  • March 1, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியாக அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து,  பீப்பாயொன்றின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் […]

இலங்கை

ஈரான் தாக்குதலில் இலங்கையர்கள் காயம் : UAE அறிக்கை!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானுடன் தொடர்புடைய சமீபத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து 03 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. UAE வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 58 பேர் சிறு காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, […]

இலங்கை செய்தி

எரிபொருளுக்கு மீண்டும் QR?

  • March 1, 2026
  • 0 Comments

பொதுமக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இலியாஸ் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை […]

உலகம்

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்கா தரப்பில் மூவர் பலி!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் மீதான தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் பலர் சிறிய அளவிலான காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சிகளுக்கு ஆளானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பணிக்குத் திரும்பும் பணியில் உள்ளனர். முக்கிய போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன, எங்கள் பதிலடி முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. “நிலைமை சீரற்றதாக உள்ளது, எனவே குடும்பங்களுக்கு மரியாதை நிமித்தமாக, எங்கள் வீரமரணம் […]

உலகம்

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு!! மூவர் ஆபத்தான நிலையில்!

  • March 1, 2026
  • 0 Comments

டெக்சாஸின் ஆஸ்டினில் (Austin) உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் பொழுதுபோக்கு  இடமான  புஃபோர்டில் (Buford) இன்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 14 பேரில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காலை 1:39 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகவும், தகவல் கிடைத்து சுமார் 57 வினாடிகளுக்குள் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கியுடன் மக்களை அச்சுறுத்திய ஆண் சந்தேகநபர் மீது […]