ஐரோப்பா செய்தி

அலி கமெனியின் உயிரிழப்புக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமெனி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (Jon Healy) இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் ஈரான் மீது எந்தவொரு நேரடி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையென கூறப்படுகிறது. பிராந்தியத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்புக்கே உடனடி முன்னுரிமையளிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நேற்று போர் ஆரம்பமானத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் அவசர பாதுகாப்பு […]

ஐரோப்பா செய்தி

கிரேட்டர் மான்செஸ்டர் M6 வீதியில் போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு

  • March 1, 2026
  • 0 Comments

கிரேட்டர் மான்செஸ்டர் M6 வீதியில் பொலிஸார் போலீசார் தடையினால் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) விகன் (Wigan) அருகே முன்னதாக M6 நெடுஞ்சாலை (M6 Motorway) பொலிஸாரால் மூடப்பட்டதால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அதிகாரிகள் கூறியதன் படி, ஒரு விமான ஆம்புலன்ஸ் (air ambulance) தரையிறங்கியதனால், ஸ்டாண்டிஷ் (Standish) மற்றும் ஓரெல் (Orrell) பகுதிகளில் தெற்கு நோக்கி போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வீதி மீண்டும் திறக்கப்பட்டாலும், ஒரு மணி […]

செய்தி விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி பெற்றது

  • March 1, 2026
  • 0 Comments

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வெற்றி அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும்.

இந்தியா செய்தி

அலி கமெனி கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்ப்பு

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதைத் கண்டித்து சென்னை, காஷ்மீர் மற்றும் லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் வீதியில் புது கல்லூரி அருகே இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் […]

இலங்கை

ஈரான் மீதான தாக்குதல் : இலங்கைக்கு மற்றுமொரு பேரிடி!

  • March 1, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற நிலை இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் வீரசிங்க, உலகளாவிய தினசரி எண்ணெய் உற்பத்தி சுமார் 100 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது என்றும், சுமார் 20% மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார். இந்த விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் […]

உலகம்

பழிவாங்குவது ‘சட்டபூர்வமான உரிமை’ : மசூத் பெஷேஷ்கியன் அழைப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

பழிவாங்குவது ‘சட்டபூர்வமான உரிமை’ என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச தலைவரின் கொலை “முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான போர்” என்று அறிவித்துள்ளார். பழிவாங்குவது சட்டப்பூர்வமான உரிமை என்றும், இந்த பெரிய பொறுப்பையும் கடமையையும் அதன் முழு பலத்துடன் நிறைவேற்றுவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். கமேனியின் மரணம்  இன்றைய இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய துன்பம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் […]

ஐரோப்பா செய்தி

விமானங்கள் ரத்து – பிரித்தானியர்களுக்கான விசேட அறிவிப்பு

  • March 1, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) மற்றும் வர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (Al Maktoum International Airport) ஊடாக இடம்பெறும் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வான்வெளி மூடப்பட்டிருப்பதாலும், சில நாடுகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், நீண்ட தூரப் பயணங்களும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா தொடர்பு சந்தேகம் – ஆர்மீனியா ஏற்றுமதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பிரித்தானியா

  • March 1, 2026
  • 0 Comments

ரஷ்ய இராணுவ விநியோகச் சங்கிலியுடன் தொடர்புகள் இருப்பதாக The Guardian தகவல் வெளியிட்ட நிலையில் ஆர்மீனியாவிற்கு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கிய முடிவை பிரித்தானிய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. செஷயரை (Cheshire) தளமாகக் கொண்ட சிக்னெட் டெக்ஸ்கிம்ப் (Cygnet Texkimp) நிறுவனம், கார்பன் ஃபைபர் “ப்ரெப்ரெக்” (carbon fibre prepreg) தயாரிக்க பயன்படும் இரண்டு இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த இலகுரக பொருள் சிவில் மற்றும் இராணுவ பயன்பாடுகளில் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஈரானில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபி (Ayatollah Alireza Arafi) நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான், நீண்டகால உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டு தாக்குதலில் உயிரிழந்த நிலையில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அராஃபி, கடந்த சில தசாப்தங்களாக கமேனியின் அருகில் இருந்தவர் என்பதுடன் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கார்டியன் கவுன்சில் (Guardian Council, Iran) போன்றவற்றில் முக்கிய பதவிகளிலும் இருந்தார். […]

உலகம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : எண்ணெய் விலை 100 டொலராக உயர வாய்ப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் தெஹ்ரானின் பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்றுமதி இடையூறுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக OPEC+ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இரு நாடுகள் தெரிவித்துள்ளன. OPEC+ எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இடையூறுகளைத் தணிக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே இன்றைய தினம் கச்சா […]