இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஸ்டாமரின் செயற்பாடு குறித்து ட்ரம்ப் அதிருப்தி

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க பிரதமர் ஸ்டார்மர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் வொஷிங்டன் பிரித்தானிய இராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை பிரதமர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் மறுத்ததால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார். பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராஃப்பிடமே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் சாகோஸ் (Chagos) தீவுகள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்டார்மர் ஆரம்பத்தில் […]

உலகம்

அகதி தஞ்சம் கோருவோருக்கு பிரிட்டன் கதவடைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே புகலிடம் வழங்குவதற்குரிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் Home Secretary Shabana Mahmood இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உத்தேச முன்மொழிவுக்கமைய அகதிகளுக்கு இனி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாமல், தற்காலிகமாகவே அதற்குரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 30 மாதங்களுக்கு ஒருமுறை தற்காலிக குடியுரிமை மீளாய்வுக்குட்படுத்தப்படும். சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவதற்குரிய இந்த நகர்வை பிரிட்டன் முன்னெடுக்கின்றது. எனினும், புதிய நடைமுறையானது அகதிகளின் […]

இலங்கை செய்தி

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று (2) மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் இன்று நள்ளிரவு வரை இரத்து

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பைத் தவிர ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சில வான்பரப்புகள் வரையறுக்கப்பட்ட விமானப் பயணங்களுக்கு மாத்திரமே தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களும் இன்று (02) நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய இரவின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் […]

இலங்கை செய்தி

பொது அவசரகால நிலைமை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

  • March 2, 2026
  • 0 Comments

பொது அவசரகால நிலைமையை நீடித்து அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வர்த்தமானி […]

உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் மீது தாக்குதல் – நெதன்யாகுவுக்கு என்ன ஆனது?

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன. ஹைஃபாவில் (Haifa) உள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ மையங்கள், கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலில் கைபார் (Kheibar) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை கண்டறிந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அச்சுறுத்தலைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக இஸ்ரேல் […]

இலங்கை செய்தி

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

  • March 2, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. மேற்படி […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் – அதிரடியாக இடமாற்றம்

  • March 2, 2026
  • 0 Comments

சைப்ரஸில் தீவில் உள்ள பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) மீது ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அக்ரோதிரியில் வசிக்கும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சைப்ரஸ் தீவிற்கு அருகிலுள்ள தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்புக்கு முழுமையான முன்னுரிமையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்க வழமையான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி! மத்திய கிழக்கின் தற்போதைய போர் சூழ்நிலை கவலை அளிக்கின்றது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடா பிரதமருடன் இணைந்து டெல்லியில் இன்று ஊடக சந்திப்பை நடத்தினார். இதன்போது மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சு மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் […]