ஐரோப்பா

போர் பதற்றம் : ஈரானே பொறுப்பு – சீனாவின் உதவியை நாடிய பிரான்ஸ்!!

  • March 3, 2026
  • 0 Comments

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot) மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற நிலைமையை தணிக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் (Wang Yi) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் இருவரும் பதற்றத்தைக் குறைக்கப் பாடுபட ஒப்புக்கொண்டதாக பிரெஞ்சு வெளியுறவு  அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,  ஈரானிய மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் தீர்வைத் தேடுவதற்கும் இருநாட்டு தலைவர்களும் இதன்போது உறுதிப் பூண்டுள்ளனர். இதேவேளை பிராந்தியம் முழுவதும் […]

உலகம்

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது!

  • March 3, 2026
  • 0 Comments

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக   குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. நாங்கள் அனைத்து வழக்கமான மற்றும் அவசர தூதரக சந்திப்புகளையும் ரத்து செய்துள்ளோம். தூதரகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் நாங்கள் தொடர்பு கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

பழிவாங்கல் வேண்டாம்: கருணை காட்டுங்கள்! இம்ரான் கானுக்காக இலங்கை எம்.பி. களத்தில்!!

  • March 3, 2026
  • 0 Comments

“பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிகிச்சை பெறுவதற்காக மனிதாபிமான ரீதியிலேனும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் Imran Magaroop தெரிவித்தார். விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” பாகிஸ்தானின் ஒரு தலைவராக மட்டுமன்றி, உலகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் இம்ரான் கான். தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு […]

இலங்கை செய்தி

தூதரகங்கள், சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி வரும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர், அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மூத்த பொலிஸ் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையினால், வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: எதிரணி எம்.பிக்கள் கொழும்பில் முகாமிட்டு ஆராய்வு!

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள SL Parliament எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (03) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சந்திப்பில் பங்கேற்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல்தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் […]

இலங்கை செய்தி

இலங்கையிடம் ஈரான் தூதுவர் விடுக்கும் அவசர கோரிக்கை!

  • March 3, 2026
  • 0 Comments

“சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை மௌனம் காக்க கூடாது.”என்று இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்தார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் இலங்கை தற்போதைய சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என தூதுவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இலங்கை ஒரு நடுநிலையான நாடு. எனினும், சர்வதேச சட்ட மீறல் குறித்து இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் […]

இந்தியா

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குகிறது கனடா: ஒப்பந்தம் கைச்சாத்து!

  • March 3, 2026
  • 0 Comments

இந்தியாவின் India அணு மின் உற்பத்திக்குரிய யுரேனியத்தை வழங்குவதற்கு கனடா Canada இணக்கம் வெளியிட்ட நிலையில் இது தொடர்பில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney கடந்த 27 ஆம் திகதி இந்தியா வந்தார். இந்நிலையில் பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது பிரதமர் மோடியும், பிரதமர் கார்னியும் இரு நாட்டு […]

உலகம் முக்கிய செய்திகள்

ஐ,டி.எஃப் தயாரித்த அறிக்கை : லெபனான் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்!

  • March 3, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள ஏராளமான  இடங்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது. தெற்கு பெய்ரூட்டின் இரண்டு சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. “லெபனானில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக பெயர்கள் காட்டப்பட்டுள்ள கிராமங்களில் உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல், அங்கிருக்கும் மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சுமார் 50 கட்டிடங்களுக்கு இவ்வாறு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ஐ.டி.எஃப் தயாரித்துள்ள பட்டியலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியஸ்தர்கள் […]

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் மறைவு: இந்திய கிராமமொன்றில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அயத்துல்லா அலி காமேனி கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்ற கிராமத்துக்கு இரு தடவைகள் வருகை தந்துள்ளார். 1980, 81 காலப்பகுதியிலேயே இவ்விஜயம் இடம்பெற்றது. மேற்படி ஊரில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் வாழ்வதால் அவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்தினார். அவர் வந்து சென்ற பின்னர், ஈரான் அரசின் உதவியுடன் அலிப்பூரில் காமேனி […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் நேரில் களமிறங்கும் அமெரிக்க படைகள்!

  • March 3, 2026
  • 0 Comments

தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார். Saudi Arabia, ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது Iran இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையிலேயே Trump மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், இதற்கான பதிலடி நடவடிக்கை பற்றி அவர் விரைவில் தெரியப்படுத்துவார் எனவும் தெரியவருகின்றது. அமெரிக்க தூதுரகம்மீதான தாக்குதலில் குறைந்த அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. […]