செய்தி

இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்? பலர் மாயம்!

  • March 4, 2026
  • 0 Comments

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல்மீது, நீர்மூழ்கிக் கப்பலொன்று தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அச் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது. […]

இலங்கை செய்தி

போரால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் பற்றி ஆராய்வு!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலைமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எரிபொருள் […]

உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்தான் எங்கள் இலக்கு : இஸ்ரேல் சபதம்!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்கிறாரோ, அவர் “அழிக்கப்பட வேண்டிய இலக்காக” இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் – 35 பேர் மீட்பு! நூற்றுக்கணக்கானோர் மாயம்!

  • March 4, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் ஈரானிய கப்பல் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 100 பேர் காணாமல்போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நீர்மூழ்கிக் கப்பல் […]

செய்தி

புனித நகரில் ஈரான் உச்ச தலைவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவரின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டுள்ளனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் , அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. போருக்கு மத்தியிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அதேவேளை, தலைநகர் தெஹ்;ரானில் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம் : தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை!

  • March 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சட்டப்பூர்வ உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி அமலுக்கு வரும் என்று அம்மாநிலத்தின் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ( Jacinta Allan) தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் சம வாய்ப்புச் சட்டத்தில் பொறிக்கப்படும் என்றும்,  வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமைகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முதல் அதிகாரபூர்வ மாநிலமாக விக்டோரியா மாநிலம் மாறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை அனைத்து பணியிடங்களுக்கும் […]

கல்வி

ஈரான் கப்பலுக்கு உதவியது ஏன்? இலங்கை விளக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார். இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு […]

உலகம்

தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வடகொரியா!

  • March 4, 2026
  • 0 Comments

வடகொரியா  தனது தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் இன்று தேர்ந்தெடுக்கும் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிம் ஜாங் உன் (Kim Jong Un) ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( கிம்மின் தாத்தாவான கிம் இல் சுங் ( Kim Il Sung) நீண்டகாலமாக அந்த பதவியை வகிந்து வந்துள்ளார்)  இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆளும் தொழிலாளர் கட்சியின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வருகிறது.  அத்துன் […]

இலங்கை செய்தி

திருமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் சிப்பாய் கைது!

  • March 4, 2026
  • 0 Comments

திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், வான் எல , பன்சல் கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 1,450 மில்லி கிராம் […]

இந்தியா

யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!

  • March 4, 2026
  • 0 Comments

  அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர Narendra Modi மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார். இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதலே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் […]