உலகம்

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம் : தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சட்டப்பூர்வ உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி அமலுக்கு வரும் என்று அம்மாநிலத்தின் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ( Jacinta Allan) தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் சம வாய்ப்புச் சட்டத்தில் பொறிக்கப்படும் என்றும்,  வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமைகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முதல் அதிகாரபூர்வ மாநிலமாக விக்டோரியா மாநிலம் மாறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை அனைத்து பணியிடங்களுக்கும் பொருந்தும். இருப்பினும் 15 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட வணிகங்கள் ஜூலை 1, 2027 அன்று இந்த திட்டத்தை தாமதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறியினும் இந்த புதிய கொள்கையால் மாநிலப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்றும், முதலீடுகள் குறைவடையும் என்றும் வணிகக் குழுக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்