அறிவியல் & தொழில்நுட்பம்

சிக்னல் பயனர்களுக்கு ஆபத்து! ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

  • March 10, 2026
  • 0 Comments

பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்குப் புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியைப் பயன்படுத்தும் முக்கிய நபர்களைக் குறிவைத்து உலகளாவிய ரீதியில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக டச்சு (Dutch) உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அரச அதிகாரிகள், இராணுவப் படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை இலக்கு வைத்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மோசடி எப்படி நடக்கும் (Phishing Attack) விதம் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் நிலைப்பாட்டுக்கு சுவிஸ் பாராட்டு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து தூதரக ஊழியர்களை அசர்பைஜானுக்கு மாற்றும் நெதர்லாந்து

  • March 10, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் பணியாற்றும் தனது தூதரக ஊழியர்களை அசர்பைஜானுக்கு தற்காலிகமாக மாற்ற நெதர்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஈரானில் உள்ள டச்சு தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக அசர்பைஜானின் தலைநகர் பாகுவிற்கு (Baku)மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புடைய அதிகாரி பெரெண்ட்சன் சமூக வலைதளமான X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை செய்தி

பொருளாதார கண்காணிப்புக்குழுவை நியமித்தது இலங்கை!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ Anil Jayantha Fernando தலைமையில் இதற்குரிய குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்,அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

வாழ்வியல்

இயற்கை வைத்தியம்: தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டிய ‘மூலிகை’ ரகசியம்

  • March 10, 2026
  • 0 Comments

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, அடர்த்தியான வளர்ச்சியைத் தூண்ட தேங்காய் எண்ணெயுடன் பின்வரும் இயற்கை பொருட்களைச் சேர்த்துப் பயன்படுத்துவது தற்போது இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமான 3 முறைகள்: 1: சின்ன வெங்காயம் & கறிவேப்பிலை: 200 மி.லி தேங்காய் எண்ணெயில் 10 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சி வடிக்கவும். வெங்காயத்தில் உள்ள கந்தகம் (Sulphur) முடி வேர்களை வலிமையாக்கும். 2 : வெந்தயப் பொடி & கற்றாழை: தேங்காய் எண்ணெயுடன் […]

இந்தியா செய்தி

ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்தில் இந்தியா!

  • March 10, 2026
  • 0 Comments

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் Stockholm International Peace Research Institute ஆய்வு அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை குவிப்பதற்கு பிரதான காரணமென கூறப்படுகின்றது. கடந்த 2016- 2020 கால கட்டத்தை […]

உலகம் செய்தி

ஆம்புலன்ஸ்கள், அவசர மையங்கள் சேதம் – தெஹ்ரானில் பெரும் அழிவு

  • March 10, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சுமார் 460 பேர் உயிரிழந்ததுடன், தெஹ்ரான் அவசர சுகாதார சேவைகள் துறையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் முன்னெடுத்ததிலிருந்து 4,309 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 28 முதல் தலைநகரில் நடந்த தாக்குதல்களில் 18 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 18 அவசரகால சிகிச்சை மையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரான் முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் 1,200 க்கும் மேற்பட்டோர் […]

இலங்கை செய்தி

எரிபொருள் நுகர்வை குறையுங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமையே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி […]

இலங்கை செய்தி

321 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் – கனேடியர்கள் இருவர் கைது

  • March 10, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 321 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (10) காலை தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து நாட்டிற்கு வருகை தந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கனடாவைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவரும் 29 வயதுடைய பெண் ஒருவருமே […]

இலங்கை

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஏ.எஸ். எம் ரபீஸ் தெரிவு

  • March 10, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எஸ்.எம். ரபீஸ் இன்று (10) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தெரிவு, திருகோணமலை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் முன்னாள் தலைவர் புனிதவதி துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.   பொதுக்கூட்டத்தின் போது, சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.