ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. https://x.com/CENTCOM/status/2031489675760640370?s=20













