இலங்கை செய்தி

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • March 12, 2026
  • 0 Comments

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலை பார்க்க சென்ற போதே நேற்று (11) மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இலங்கை செய்தி

யாழில் 6 சந்தேக நபர்களின் சொத்துகள் முடக்கம்!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாக நிலையில் அவர்களுக்கு எதிராக திறந்த பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தொடர்ந்து தலைமறைவாக உள்ளமையால் , பொலிஸாரினால் […]

இலங்கை செய்தி

“ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குக’! – சுமந்திரன்

  • March 12, 2026
  • 0 Comments

“தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் தங்களுக்கு அங்கேயே வாழ்வுரிமையும் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அதை நாங்களும் வரவேற்று ஆதரிப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran தெரிவித்திருக்கின்றார். புதுடில்லியில் நேற்று மாலை வின்ட்ஸர் பிளேஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் ‘முகம் இல்லா மனிதர்கள் – இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்’ என்ற […]

உலகம் செய்தி

18 ட்ரோன்களை இடைமறித்து அழித்தது சவூதி!

  • March 12, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் Saudi Arabia கிழக்குப்பகுதியில் ஊடுருவிய பதினெட்டு ஆளில்லா விமானங்களை drones வெற்றிகரமாகத் தடுத்து அழித்தாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதியை நோக்கி வான்வழித் தாக்குதல் முயற்சிகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, ஷேபா எண்ணெய் வயலை இலக்கு வைத்துச் சென்ற ஒரு ட்ரோன் வடக்கு எல்லைப்பகுதியில் இடைமறித்துத் தகர்க்கப்பட்டது. சவூதி பாதுகாப்புப் படைகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது நாட்டின் முக்கிய எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியைக் காட்டுகிறது என […]

உலகம்

போர்ச் சூழல்: மத்திய கிழக்கு சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு!

  • March 12, 2026
  • 0 Comments

போர்ச் சூழலால் மத்திய கிழக்கின் சுற்றுலாத்துறை நாளொன்றுக்கு 600 மில்லியன் டொலர்வரை பேரிழப்பை சந்தித்து வருகின்றது என தெரியவருகின்றது. the World Travel and Tourism Council (WTTC) மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் சர்வதேசப் பயணிகளின் வருகை குறைவு ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. வான்வெளி மூடப்பட்டதால் கே.எல்.எம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களின் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. பாதுகாப்பு சார்ந்த நெருக்கடிகள் நீங்கிய […]

இலங்கை செய்தி

“‘என் பிள்ளை அருகில் இருக்க வேண்டும்’ – நிறைவேறாத இறுதி ஆசை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!

  • March 12, 2026
  • 0 Comments

கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி ((வயது-79) , புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து,  புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி […]

இலங்கை செய்தி

யாழில் சினிமா பாணியில் வன்முறை: ஒரே இரவில் 5 வீடுகள்மீது தாக்குதல்!

  • March 12, 2026
  • 0 Comments

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய வீட்டுக் கடன் சந்தையில் பாரிய நெருக்கடி: வட்டி வீதங்கள் சடுதியாக அதிகரிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

பிரித்தானியால் வீட்டுக்கடன் (Mortgage) சந்தையில் தற்போது நிலவும் பதற்றநிலை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்குப் பின்னர் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக நிதிச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகால நிலையான வீட்டு கடன்களுக்கான சராசரி வட்டி வீதம் 5.01% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரான மிக உயர்ந்த மட்டமாகும். இதேவேளை, ஐந்து ஆண்டுகால வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் 5.09% ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் […]

இலங்கை செய்தி

LAUGFS Gas விலையும் அதிகரிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

இலங்கையில் ‘லாப்’ சமையல் எரிவாயுவின் LAUGFS Gas விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே இன்று (11) லாப் கேஸின் விலையும் எகிறியுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடையுடை சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,630 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ லாப் சமையல் எரிவாயுவின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1, 862 ரூபாவாகும். சர்வதேச சந்தை விலை […]

ஐரோப்பா

பள்ளியில் மாணவிக்கு கத்திக் குத்து: நார்விச்சில் 16 வயது சிறுவன் அதிரடி கைது!

  • March 11, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் நோர்விச் (Norwich) நகருக்கு அருகில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், ஒரு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். இன்று காலை சுமார் 10:24 மணியளவில்,நோர்விச் (Norwich) தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew School) பள்ளியில் ஒரு மாணவி தாக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் வருவதற்கு முன் தாக்குதல் […]