அரசியல் இலங்கை செய்தி

எரிபொருள் விலையை குறைக்குமாறு சஜித் வலியுறுத்து!

  • March 11, 2026
  • 0 Comments

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, Sajith Premadasa அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இன்று (11) விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பொய்யுரைத்துள்ளது. உலக சந்தையில் அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சி அமைந்தது. எனவே, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த […]

உலகம் ஐரோப்பா

எண்ணெய் விலை உயர்வு: ஜி7 நாடுகளின் அதிரடி முடிவு!

  • March 11, 2026
  • 0 Comments

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஜி7 (G7) நாடுகள் தங்கள் வசம் உள்ள அவசரகால எண்ணெய் இருப்புகளை (Strategic Reserves) கூட்டாக வெளியிட ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency) உடன் இணைந்து ஜி7 எரிசக்தி மற்றும் நிதி அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில், சுமார் 300 முதல் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022-இல் […]

விளையாட்டு

பங்களாதேஷிடம் மண்டியிட்டது பாகிஸ்தான் அணி!

  • March 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் ICC ODI பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. ICC T -20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் […]

பொழுதுபோக்கு

கணவரைப் பிரிந்தார் நடிகை ஹன்சிகா!

  • March 11, 2026
  • 0 Comments

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹல் கதுரியா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது. ஹன்சிகா தனது விவாகரத்துக்கு பின்னர்  சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹன்சிகா மோத்வானி தற்போது பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சோஹைல் கதுரியா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகு […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ஆதரவாக வடகொரியா களத்தில்!

  • March 11, 2026
  • 0 Comments

  ஈரானின் புதிய உச்ச தலைவரை அமெரிக்கா, இஸ்ரேல் என்பன குறி வைத்துள்ள நிலையில், புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனத்தை சீனா மற்றும் ரஷ்யா என்பன ஏற்றிருந்த நிலையிலேயே வடகொரியாவும் ஆதரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் தமது தலையீட்டுடனேயே புதிய உச்ச தலைவர் […]

ஐரோப்பா

சுவிஸில் பயங்கரம்; பேருந்துக்குள் பயணி தீக்குளிப்பு; அறுவர் பரிதாபமாக உயிரிழப்பு

  • March 11, 2026
  • 0 Comments

சுவிஸ் தலைநகர் பெர்னிலிருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெர்சர்ஸ் (Kerzers) என்ற சிறிய நகரின் பிரதான வீதியில் நேற்று மாலை சுமார் 6:25 மணி அளவில் இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்துள்ளது. இதில் இதுவரை குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் […]

இலங்கை செய்தி

பாலைதீவு படகு விபத்து:பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

  • March 11, 2026
  • 0 Comments

யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையிலிருந்து கடந்த 6ஆம் திகதி பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அன்றைய தினமே இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 12 பேர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மாணவிக்கு கத்திக்குத்து: மூடப்பட்ட பாடசாலை

  • March 11, 2026
  • 0 Comments

நார்விச் அருகிலுள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை ஒரு மாணவி கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பள்ளி முழுவதும் உடனடியாக மூடப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10:24 மணி (GMT) அளவில், பள்ளியில் ஒரு மாணவி கத்தியால் குத்தப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினரும் அவசரக்கால ஊர்திகள் சேவைகளும் விரைந்து செயல்பட்டு காயமடைந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்குக் […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID இல் முறைப்பாடு!

  • March 11, 2026
  • 0 Comments

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் FCID, வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபா நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு […]

இலங்கை செய்தி

” பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்” – ஜனாதிபதி அறைகூவல்!

  • March 11, 2026
  • 0 Comments

“விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்.”  என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake. தெரிவித்தார். எனவே, மேற்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் […]