இலங்கை செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணம் கோரல் – திகதி நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு

  • March 24, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள், தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் […]

இலங்கை செய்தி

ஈரானில் புதிய தேசிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்!

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காதர் Mohammad Bagher Zolghar நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை வகித்த அலி லாரிஜானி Ali Larijani கடந்த 17 ஆம் திகதி போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் இந்த புதிய நியமனம் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்கும் சொல்காதர், இதற்கு முன்பு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் நீதித்துறையில் உயர்மட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். […]

இலங்கை செய்தி

அடுத்த 03 மாத உரக் கையிருப்பை பேண உர நிறுவனங்கள் இணக்கம்

  • March 24, 2026
  • 0 Comments

அடுத்த 03 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன. விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் […]

valero-refinery-fire-explosion-smoke-plume-texas-usa இன்றைய முக்கிய செய்திகள் உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து : மக்கள் முடக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணம் போர்ட் ஆர்தர் (Port Arthur) பகுதியில் அமைந்துள்ள பிரபல வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை பயங்கரத் தீபப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீப்பரவல் சம்பவத்தைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழும்பியதுடன், பிரதேசம் முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலைமையின் தீவிரத்தை கருத்திற் கொண்டு, நகரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் […]

உலகம்

கமேனி மீது தாக்குதல்: டிரம்ப் – நெதன்யாகு ரகசிய திட்டம் அம்பலம்!

  • March 24, 2026
  • 0 Comments

மரணம் அடைந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே நடந்த திட்டமிடல் குறித்த உள்விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, அதிபர் டிரம்பைத் தொடர்புகொண்டு, தெஹ்ரானின் தலைமைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு […]

இலங்கை கல்வி

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்குகிறது ADB!

  • March 24, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்தவுக்கு பிணை

  • March 24, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் […]

sri-lanka-protest-against-anura-kumara-dissanayake-government-may-2026 இலங்கை

அநுர அரசுக்கு எதிராக மே மாதம் எதிர்ப்பு பேரணி

  • March 24, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலுமையானது, மாதத்தில் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் வெளிப்படுவதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விமர்சித்துள்ளார். எனவே, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல் காரணமாகவே இன்று டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிராக […]

iran-military-readiness-missile-launch-israel-conflict-2026 உலகம்

இழப்புகள் ஈடுசெய்யப்படும் வரை போர் ஓயாது – ஈரான் அறிவிப்பு

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானின் இழப்புகள் ஈடுசெய்யப்படும் வரை போர் ஓயாது என்று அயதுல்லா மொஜ்தபா கமேனியின் ஆலோசகரான மொஹ்சென் ரெசாயி கூறுகிறார். அனைத்துத் தடைகளும் நீக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறாது என்றும் உலகளாவிய உத்தரவாதங்களைக் கோரப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த முறை அமெரிக்கா இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று மொஹ்சின் ரெசாயி கூறினார். முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். […]

உலகம் செய்தி

ஈரான் தாக்குதல்கள் – ஐ.நா மனித உரிமைகள் மன்றில் அவசர விவாதம்

  • March 24, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் நாளை புதன்கிழமை அவசர விவாதம் நடத்தவுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் மற்றும் ஜோர்டான் சார்பில் பஹ்ரைன் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விவாதம் நடைபெறுகிறது என மன்றம் தெரிவித்துள்ளது. இந்த அமர்வின் போது, பஹ்ரைன், ஜோர்டான், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய […]

error: Content is protected !!