உலகம்

“தோல்வியை ஒப்புக்கொள்!” – ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறும் இல்லாவிட்டால் முன்பை விட கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டதாகவும் , தொடர்ந்து போரிட முடிவுசெய்துள்ளதாகவும் அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அல் ஜசீராவின் தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய மற்றும் வடக்கு […]

உலகம் செய்தி

ஈரான் எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை‌ இஸ்ரேல் தனித்து மேற்கொண்டது

  • March 26, 2026
  • 0 Comments

ஈரானிய எரிவாயு தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் “தனித்துச் செயல்பட்டது” என  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை வலியுறுத்தியதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதன் பேரில், எதிர்காலத் தாக்குதல்களை தற்காலிகமாக இடைநிறுத்த தனது இராணுவம் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தனது கருத்துகள் மூலம், தானும் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் மற்றும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகிறறோம் என்பதை வெளிப்படுத்த முயன்றார் என்று […]

உலகம்

“என்னை ஈரானின் உச்சத்தலைவராக்கப் பார்த்தார்கள்!” – ட்ரம்ப் அதிரடி

  • March 26, 2026
  • 0 Comments

ஈரானின் தலைமை என்னை நாட்டின் அடுத்த உச்சத் தலைவராக நியமிப்பதற்கு முறைசாரா முறையில் முன்வந்தது, ஆனால் நான் அதை நிராகரித்துவிட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிண்டலாகக் கூறியுள்ளார். குடியரசுக் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், ஈரான் எந்தப் பேச்சுவார்த்தையையும் வன்மையாக மறுத்திருந்தபோதிலும், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை மீண்டும் வலியுறுத்தினார். தொடர்ந்தும் பேசிய டிரம்ப், ஈரானியத் தலைமை என்னை உச்சத் தலைவராக்க விரும்பியது, ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று கூறினார். வேறு எந்த […]

உலகம் செய்தி

அபுதாபி தாக்குதல் –  உயிரிழந்தோர் பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டினர் என உறுதி

  • March 26, 2026
  • 0 Comments

அபுதாபியில் இடைமறிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சிதறல்களில் உயிரிழந்த இருவர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாட்டினரைச் சேர்ந்தவர்கள் என  அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் என்பதும் தெளிவாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் […]

உலகம்

ஹார்முஸ் நீரிணையை இரும்புப்பிடியில் வைத்திருந்த டங்சிரி கொல்லப்பட்டார் – இஸ்ரேல் அறிவிப்பு

  • March 26, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை முடக்கிய தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவை வழிநடத்திய டங்சிரி, பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹர்முஸ் நீரிணையை மூடும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு டங்சிரியிடம் இருந்தது என்றும் அந்த அதிகாரி மேலும் […]

இலங்கை

இலங்கை முழுவதும் வேட்டை சிக்கிய ஒரு இலட்சம் பேர்

  • March 26, 2026
  • 0 Comments

‘முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 14 ஆயிரம் சந்தேகநபர்களில், 2 ஆயிரத்து 367 பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயிரத்து 71 கிலோ 338 கிராம் ஹெரோயின், ஆயிரத்து 938 கிலோ 299 கிராம் ஐஸ், 4 ஆயிரத்து […]

உலகம்

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா – அபாய கட்டத்தை எட்டும் ஈரான் போர்

  • March 26, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தனது இராணுவத் தயாரிப்புகளை அமெரிக்கா தீவிரப்படுத்துவதால் , தற்போதைய மோதல் விரைவில் தரைப்படைப் போரின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தற்போதைய படைக் குவிப்பை மறுத்தாலும், எதிர்கால நடவடிக்கைகளை அவர் நிராகரிக்கவில்லை. ஒரு சாத்தியமான தரைவழிப் படையெடுப்பிற்கான திட்டங்களை பென்டகன் வகுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 82வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த சுமார் 3,000 வான்குடை வீரர்களும், ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களும் ஏற்கனவே மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இது விரைவான […]

இலங்கை ஐரோப்பா

இத்தாலிய காவல் படையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு

  • March 26, 2026
  • 0 Comments

முழு இலங்கை மக்களையும் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், இத்தாலிய காவல் படையில் (கராபினேரி) பணியாற்றிய முதல் மற்றும் ஒரே இலங்கை அதிகாரியான 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ உயிரிழந்துள்ளார். இத்தாலியின் மிலான் நகரைச் சேர்ந்த ஷெஹான் பெர்னாண்டோ, அந்நாட்டின் காவல் படையில் ஒரு மரியாதைக்குரிய அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தகவல்களின்படி, அவர் வசித்து வந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பணித் துப்பாக்கியும் அவரது உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான […]

உலகம் செய்தி

காலம் முடிவதற்கு முன் செயல்படுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட தொடர்ச்சியான பதிவில், ஈரானின் பேச்சுவார்த்தையாளர்களை “மிகவும் வித்தியாசமானவர்கள்” மற்றும் “விசித்திரமானவர்கள்” என்று அவர் விமர்சித்தார். மேலும், அவர்கள் அமெரிக்காவிடம் ஒப்பந்தத்திற்காக “கெஞ்சுகிறார்கள்” என்றும், ஈரானின் இராணுவம் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்றும் அவர் கூறினார். அவர்கள் பொதுவாக “எங்கள் முன்மொழிவை பரிசீலித்து வருகிறோம்” என்று கூறுவது தவறு என்றும், “காலம் கடப்பதற்குள் அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட […]

உலகம் செய்தி

ஹார்முஸை மேற்பார்வையிட்ட ஈரானிய கடற்படைத் தளபதி பலி – இஸ்ரேல் அறிவிப்பு

  • March 26, 2026
  • 0 Comments

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை முற்றுகையை மேற்பார்வையிட்டு வந்த ஈரானிய கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர் “நேரடியாகப் பொறுப்பானவர்” எனக் குற்றம் சாட்டிய இஸ்ரேல் காட்ஸ், அவர் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த நீரிணை, உலகின் மிகப் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றாகும். கடந்த மாதம் தொடங்கிய மோதலுக்கு பின்னர், ஈரான் இதை […]