உலகம் செய்தி

ஈரான் தூதுவரை சந்தித்த மைத்திரி

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடையே  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஈரான் தூதரகத்தில் நேற்று (25) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் குறித்து‌ கலந்துரையாடல்‌ இடம்பெற்றுள்ளது. மேலும் ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்காவிற்கு நேட்டோ தேவையில்லை – ட்ரம்ப் ஆவேசம்

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , நேட்டோ நாடுகளை மீண்டும் கடுமையாக விமர்சித்து, ஈரான் தொடர்பான நிலைமை குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், ஈரானில் நடைபெறும் மோதலில் நேட்டோ நாடுகள் எந்த உதவியும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு நேட்டோவின் ஆதரவு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “தற்போது இராணுவ ரீதியாகச் சிதைக்கப்பட்டுள்ள, ஒரு பைத்தியக்கார தேசமான ஈரானுக்கு உதவுவதற்கு நேட்டோ நாடுகள் முற்றிலும் […]

இந்தியா

அதிரவைக்கும் விபத்து: ஆற்றில் மூழ்கிய பேருந்து – பல உயிர்கள் பறிபோன சோகம்!

  • March 26, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, தவுலத்தியாவில் உள்ள மூன்றாம் எண் படகுத்துறையின் முன்பு நேற்று மாலை ஐந்து மணியளவில் பத்மா ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும், பேருந்து ஆற்றில் வீழ்ந்த உடனேயே அதிலிருந்த பயணிகள் சிலர் நீந்தி தப்பித்தனர். இரவு 11 மணி வரையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிரேன் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது. தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன. சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

மட்டக்களப்பு சொத்து சேர்ப்பு விவகாரம் - விசாரணைப் படம் இலங்கை

மட்டக்களப்பு சம்பவம் : வேலைக்குச் செல்லாமல் சொத்து சேர்த்தது எப்படி?

  • March 26, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]

இலங்கை

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று […]

உலகம் செய்தி

ஈரானை இயக்கும் புடின்: பிரித்தானியா எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே ஆபத்தான ராணுவ உறவு குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் John Healey எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ரஷ்யா தனது புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஈரானுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு “ஆக்கிரமிப்பு அச்சாக” உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்பாடுகளுக்குப் பின்னால் விளாடிமிர் புடினின் மறைமுகக் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!

  • March 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது […]

error: Content is protected !!