கலிபோர்னியாவில் மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் சடலமாக கிடந்த இந்திய பொறியாளர்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வாலியில் உள்ளது. இங்கு மெட்டா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமையகம் உள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரதிக் பாண்டே என்பவர் மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 19ம் தேதி அலுவலகம் சென்ற இவர், மறுநாள் அதிகாலை அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான […]













