இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் பலி! பல எலிகளின் எலும்பு வலிமையில் பாதிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் செயற்கைக்கோள் மூலம் இந்த எலிகள் அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கு ஏற்படும் உயிரியல் தாக்கங்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெற, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்த எலிகளில், 65 எலிகள் வெற்றிகரமாக பூமி திரும்பின. விண்வெளிப் பயணத்திற்கு பின் எலிகள் நிலை சமநிலைக்கு (vestibular) தொடர்பான சோதனைகளில் குறைவான செயல்பாடு காட்டியுள்ளன. ஊசி பிடிக்கும் தன்மை […]

ஆசியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் உறவிற்கு சாத்தியமில்லை – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இயல்பான உறவு சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் இயல்பான உறவு சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் பாகிஸ்தான் வம்சாவளியினரிடையே பேசிய அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்தியாவின் பொறுப்பு என குறிப்பிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருப்பதற்குப் பதிலாக பகை நாடுகள் போல் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமைதியாக இருப்பது அல்லது தொடர்ந்து போராடுவது என்பது […]

ஆசியா செய்தி

அமெரிக்கா, வெனிசூலா இடையே அதிகரிக்கும் பதற்றம் – போருக்குத் தயார் படுத்தும் வெனிசூலா இராணுவம்

  • September 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வெனிசூலா இராணுவம் தங்கள் நாட்டு மக்களை போருக்குத் தயார் படுத்தும் விதமாக ஆயுதப் பயிற்சி அளித்தது. ரைபிள்கள் மட்டுமின்றி விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய டர்ரெட் ரக துப்பாக்கியையும் இயக்க தன்னார்வளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வெனிசூலாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி, வெனிசூலா நாட்டு படகுகள் மீது அண்மையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாலேயே படகுகள் தாக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த போர்ச்சுகல்

  • September 21, 2025
  • 0 Comments

போர்ச்சுகல், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாலோ ரேஞ்சல் நியூயார்க்கில் அறிவித்துள்ளார். “நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான ஒரே பாதையாக போர்ச்சுகல் இரு நாடு தீர்வை ஆதரிக்கிறது, போர்நிறுத்தம் அவசரமானது” என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஹமாஸ் கைப்பிடியில் உள்ள அணைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க பாலோ ரேஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் போர்ச்சுகல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மூன்று திருநங்கைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

  • September 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில், சாலையோரத்தில் மூன்று திருநங்கைகளின் உடல்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராச்சியின் மேமன் கோத் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். “குண்டு துளைத்த மூன்று திருநங்கைகளின் உடல்கள் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன,” என்று நகர காவல்துறை அதிகாரி ஜாவேத் அகமது அப்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானில் ஹிஜ்ராக்கள் என்றும் அழைக்கப்படும் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஆர்வலர் சார்லி கிர்க்கின் நினைவஞ்சலியில் ஆயிரக்கணக்கானோருடன் இணையும் டிரம்ப்

  • September 21, 2025
  • 0 Comments

இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட வலதுசாரி அமெரிக்க ஆர்வலர் சார்லி கிர்க்கிற்கு அரிசோனாவில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 63,000 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய க்ளென்டேலில் உள்ள ஸ்டேட் ஃபார்ம் அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. சார்லி கிர்க்கை நினைவு கூர்தல் என்று அழைக்கப்படும் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் பல குடியரசுக் கட்சியினர் உரையாற்ற உள்ளனர். “இன்று ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கையை […]

இந்தியா செய்தி

பஞ்சாபில் தனியார் வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் மரணம்

  • September 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு ஆசிரியர்களும் ஆறு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாகூரில் இருந்து வடமேற்கில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹஃபிசாபாத் நகரில் இந்த சம்பவம் நடந்தது. “அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக் குழுக்கள் நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு ஒருவர் உயிரிழந்தார்,” என்று மீட்பு குழு ஒரு அறிக்கையில் […]

செய்தி வட அமெரிக்கா

புளோரிடா விமான நிலையத்தில் பயணியின் பையை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 21, 2025
  • 0 Comments

புளோரிடாவில் உள்ள டம்பா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் மனித எச்சங்களைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார். ஒரு பயணியின் பொருட்களுக்குள் அலுமினியத் தாளில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் ஒரு பகுதி உட்பட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பயணியின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. குறித்த மனித எச்சங்கள் சடங்கு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதாக பயணி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கடுமையான பொது சுகாதார அபாயங்கள் காரணமாக எச்சங்கள் […]

செய்தி விளையாட்டு

AsiaCup – தொடரில் இரண்டாவது முறையும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

  • September 21, 2025
  • 0 Comments

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டி துபாயில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 58 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து 172 […]

செய்தி பொழுதுபோக்கு

பிரபல நடிகை ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயார் காலமானார்

  • September 21, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா தனது 86வது வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அவர் காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (22.09.25) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. தாயின் மறைவு குறித்து அறிக்கை […]