உலகம்

நெதன்யாகு மீதான கோபம் – கொலம்பியாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய தூதர்களும் வெளியேற்றம்

  • October 3, 2025
  • 0 Comments

கொலம்பியாவில் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளையும் தனது நாட்டிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரக வட்டாரங்களுக்கமைய, நான்கு இராஜதந்திரிகள் கொலம்பியாவில் உள்ளனர். காசாவுக்குச் செல்லும் ஒரு உதவி கடற்படையை இஸ்ரேல் கைப்பற்றி, இரண்டு கொலம்பிய ஆர்வலர்களை தடுத்து வைத்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற இரண்டு கொலம்பிய பெண்கள் சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி பெட்ரோ […]

தமிழ்நாடு

கரூர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்படும் விஜய்?

  • October 3, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கரூர் பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆணையம் பரிந்துரைத்தால் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களின் பயன்படுத்தப்படாத ஆடைகளை நன்கொடையாக வழங்க திட்டம்

  • October 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களின் பயன்படுத்தப்படாத ஆடைகளை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்க ஒரு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கமும் உபரும் இணைந்து அதைச் செயல்படுத்துகின்றன. அதன்படி, சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் அக்டோபர் 18 ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கூரியர் பிக்-அப்பை முன்பதிவு செய்யலாம். இது, வீட்டை விட்டு வெளியேறாமல் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உயர்தர தேவையற்ற ஆடைகளை நன்கொடையாக வழங்கும் வசதியை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி – உக்ரைனுக்கு கிடைக்கவுள்ள ஆயுதம்

  • October 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு டொமாஹாக்ஸ் ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. மோதல் முடிவுக்கு வராத நிலையில் இவ்வாறு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய் வழிகள் மற்றும் மின் உற்பத்தி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள ஆபத்தான நுளம்பு இனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை!

  • October 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கொடிய நோய் தொற்றுக்களை பரப்பப்கூடிய 02 வகையான நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Aedes aegypti, Aedes albopictus ஆகிய நுளம்பு இனங்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன. இந்த நுளம்பு  இனங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ்களைப் பரப்பக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே இனங்காணப்பட்ட இந்த நுளம்பு இனங்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது குறித்த […]

இலங்கை

முறையாக இல்லத்தை ஒப்படைக்காத மஹிந்த – உரிய நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்

  • October 3, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துள்ளன. எனினும், அவர் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை இரத்து செய்யும் சட்டம் […]

ஐரோப்பா செய்தி

ஸ்வீடனிலிருந்து கலிபோர்னியா வரை 5,000 மைல் பயணம் செய்து பணிபுரியும் செவிலியர்

  • October 3, 2025
  • 0 Comments

ஸ்வீடனில் இருந்து சுமார் 5,300 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு பயணம் செய்து, அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 32 வயதான கோர்ட்னி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணியாற்றுகிறார். அவர் தொடர்ந்து எட்டு நாட்கள் வேலை செய்து, ஒரு மணி நேரத்திற்கு 100 டொலருக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். அவரது வேலை திட்டம் மிகவும் தனித்துவமானது. ஒரே நேரத்தில் இரண்டு நேர […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கம் – ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் அபாயம்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் தொடர்கின்ற நிலையில் 2 நாட்களுக்குள் மத்திய அரசாங்க ஊழியர்களின் வேலையிழப்பு தொடங்கலாம் என வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முடக்க நிலை எவ்வளவு நாள் நீடிக்குமென தெரியாது என துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடு முடங்கியதற்கு ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். மீண்டும் வாய்ப்புக் கிடைக்காத வகையில் பெரும்பாலோர் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க […]

செய்தி விளையாட்டு

Womens WC – பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி

  • October 2, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று இலங்கையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவின் போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • October 2, 2025
  • 0 Comments

இந்தியா முழுவதும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சிலைகளை கரைப்பதற்காக சிறுவர்கள் சென்ற வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் பயணித்த 9 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து கடுமையாக காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் லோதன் முதன்மை சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், […]