பண மோசடி வழக்கு: அனில் அம்பானியின் உதவியாளர் கைது
பணமோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனில் அம்பானி தனக்குச் சொந்தமான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்காக ‘யெஸ்’ வங்கியில் 3,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.ஆனால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் தொகையை உரிய காரணத்துக்குப் பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அனில் அம்பானி மொத்தம் ரூ.17,000 […]













