வங்கதேசத்தின் டாக்காவில்(Dhaka) அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்
பங்களாதேஷில் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று(17) ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்தப் […]













