UKவில் ஆபத்தானவர்களாக அறியப்பட்ட 170 பேரை நாடுகடத்த முடியாமல் தவிக்கும் அரசாங்கம்!
பிரித்தானியாவில் மனித உரிமைச் சட்டங்களால் அதிக ஆபத்துள்ள நபர்களை நாடு கடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அதிகாரிகள் அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உள்துறை அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது. சுமார் 170 ஆபத்தான வெளிநாட்டினரை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதம் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்று சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பிரிட்டனில் தங்கியிருப்பது “அவமானகரமானது” என்று […]













