ஐரோப்பா முக்கிய செய்திகள்

ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய பட்ஜெட் – பாரிய நன்மையை பெறும் புலம்பெயர்ந்தோர்!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 350,000 புலம் பெயர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பகுப்பாய்வு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கூடுதல் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய பங்கைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகள் நன்மைக்கான உச்சவரம்பு இரத்து செய்யப்பட்டதை  தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட  குடும்பங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதன்படி பாகிஸ்தானில் 59,948 குடும்பங்கள் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அடுத்தப்படியாக வங்கதேசத்தில் 26,294 குடும்பங்களும், நைஜீரியா மற்றும் சோமாலியா முறையே 22,838 மற்றும் 17,407 குடும்பங்களையும் கொண்டுள்ளன.

மொத்தத்தில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட 710,882 பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குடும்பங்கள் யுனிவர்சல் கிரெடிட்டைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்