இந்தியாவின் உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள் உள்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர், அறுவர் காயமடைந்தனர். “14 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று முவானி கிராமத்தில் சுனி பாலம் அருகே விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அந்த இடத்தை அடைந்த காவல்துறையினர் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று பித்தோராகர் காவல்துறையின் ரேகா யாதவ் கூறினார். உள்ளூர் […]












