வாழ்வியல்

உடலில் ரத்த அளவை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்..!

  • May 26, 2025
  • 0 Comments

இன்றைய தலைமுறையினர் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்த ரத்த சோகை வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தற்போதைய விரைவு உணவுகளில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக இரும்புச்சத்து. விட்டமின் சி, போலிக் ஆசிட் ,விட்டமின் பி12 ,புரதம் போன்ற சத்துக்கள் உடலில் புதிய ரத்த அணுக்களை […]

இலங்கை

வவுனியா ஓமந்தை பகுதியில் கோர விபத்து – கணவன் பலி – மனைவி உட்பட மூவர் படுகாயம்

  • May 26, 2025
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்க ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் […]

இலங்கை

யாழில் தாயார் ஒருவருக்கு ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!

  • May 26, 2025
  • 0 Comments

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது உச்சக்கட்ட கோபம் – கடுமையாக விமர்சித்த டிரம்ப்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷ்யா உக்ரேன் மீது நடத்தியுள்ள தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெரிய அளவில் பொதுமக்களைக் கொல்வதாக அவர் கூறியுள்ளார். தமக்கு நெடுநாளாக தெரிந்த புட்டின் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவரது செயல்கள் வருத்தமளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார். ரஷ்ய ஜனாதிபதி டிரம்ப் அவ்வாறு சாடுவது அரிது. ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் சாத்தியம் குறித்தும் டிரம்ப் பரிசீலிக்கிறார். நேற்று உக்ரேன் […]

உலகம்

சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை

  • May 26, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.33 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.  

வாழ்வியல்

ஒல்லியாக இருப்போர் உடல் எடையை கூட்டும் உணவு முறை!

  • May 26, 2025
  • 0 Comments

சிலர் சிறு வயது முதலே ஒல்லியாகவே இருப்பர். சாப்பாட்டில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் உடல் எடை அதிகரிப்பது இல்லை என்று கவலை கொள்வர். அவர்களுக்கு ‘உடல் எடை அதிகரிக்க என்னதான் சாப்பிடுவது?’ என்ற கேள்வி எழும். அதற்கான பதில் இங்கே… “பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. பெற்றோர் ஒல்லியாக இருந்தால் பிள்ளைகளும் ஒல்லியாக இருக்க அதிக சாத்தியம் உண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, […]

உலகம்

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய பூஞ்சை குறித்து எச்சரிக்கை

  • May 26, 2025
  • 0 Comments

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய ஒரு பூஞ்சை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்பெர்ஜிலஸ் என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் நோயை ஏற்படுத்தும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பூஞ்சை வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யா முழுவதும் விரைவாகப் பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நோயின் மூன்று சாத்தியமான வடிவங்கள் வெவ்வேறு காலநிலை நிலைமைகளின் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

ஜப்பானை பின் தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா

  • May 26, 2025
  • 0 Comments

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. ஜப்பானை மிஞ்சி இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய உருமாற்ற இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்., சுப்பிரமணியம் நேற்று இதை அறிவித்தார். நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். இந்தியா தற்போது 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், IMF தரவுகளின் அடிப்படையில், இந்தியா தற்போது […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் பழைய சம்பவங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

  • May 26, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவரை, வெலிகமவில் உள்ள ஒரு சர்பிங் நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சியை நேற்று (24) சுற்றுலாப் பயணி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி பதிவாகியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதாகவும், வழக்கு செப்டம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகைதரும் […]

விளையாட்டு

தோனியின் பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

  • May 26, 2025
  • 0 Comments

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியை வெற்றியுடன் முடித்துள்ளது. நேற்றைய […]