29 கோடி ரூபா செலவில் படகு கட்டும் தளம் புனரமைப்பு
யாழ்ப்பாணம், காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 290 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் சீனோர் நிறுவனம் (Cey-Nor Foundation Ltd), காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்கான திட்டத்தை 290 மில்லியன் ரூபா (29 கோடி ரூபா) செலவில் முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் […]













