இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வழி உண்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று கலந்துரையாடினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும்.

பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும்.

முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம்.

இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம். என்றார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை