பொழுதுபோக்கு

மாஸ் நடிகரை பழிவாங்கிய அரசியல் பிரபலம் – இனி என்ன நடக்கும்?

  • December 20, 2024
  • 0 Comments

சர்வதேச அளவில் மாஸ் காட்டி வந்த அந்த நடிகர் இப்போது பெரும் அவமானத்தில் இருக்கிறார். அந்த அரசியல் பிரபலம் தான் வாய்ப்பு கிடைத்ததும் பழிவாங்கி விட்டதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது வெற்றிப்பட ஹீரோவாக வலம் வரும் அந்த நடிகர் சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டினார். எப்போதுடா அவர் சிக்குவார் வச்சி செய்யலாம் என காத்திருந்தார் அந்த அரசியல் பிரபலம். இந்த விவகாரம் தொக்கா கிடைத்ததில் விஷயமும் சீரியஸ் ஆனது. அதை ஊதி பெரிதாக்கி அரசியல் பலத்தை வைத்து […]

ஆசியா

ஜப்பானில் கடுமையாகும் சட்டம் – சரியாக வீசாதவர்களுக்கு நடவடிக்கை

  • December 20, 2024
  • 0 Comments

ஜப்பான் குப்பைகளை அகற்றும் கடும் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் நிலையில் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புக்குஷிமா நகரில் அந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாகவிருக்கின்றன. ஜப்பானில் குப்பைகளின் அளவு, எரிக்கக்கூடிய, எரிக்க முடியாதவை, மறுபயனீடு செய்யக்கூடியவை எனப் பிரிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஒவ்வொரு குப்பைப் பையும் சோதனை செய்யப்படும் என்று புக்குஷிமா நகர அரசாங்கம் அறிவித்துள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாதோர் அடையாளம் காணப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. தனிநபரோ, நிறுவனமோ… யாராக இருந்தாலும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் இரு முக்கிய மாநிலங்களில் ட்ரோன்களை பயன்படுத்த தடை!

  • December 20, 2024
  • 0 Comments

பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்கின் பல பகுதிகளில்  ஜனவரி நடுப்பகுதி வரை ட்ரோன் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. “சிறப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியூ ஜெர்சி மாநிலத்தில் நவம்பவர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டாட்சி பாதுகாப்பு கூட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில், சிக்கலான நியூ ஜெர்சி உள்கட்டமைப்பில் ட்ரோன் விமானங்களை தடைசெய்யும் […]

வாழ்வியல்

விராட் கோலி சாப்பிடாத உணவுகள் – டயட்டின் ரகசியம்

  • December 20, 2024
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்றவர். இவர் ஃபாலோ செய்யும் டயட் என்ன தெரியுமா? இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வருபவர், விராட் கோலி. பல சாதனைகளை படைத்திருக்கும் இவர், தன் உடலை ஃபிட்–ஆக வைத்திருக்கும் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். இவரது டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? விராட் கோலி: விராட் கோலிக்கு தற்போது 36 வயது ஆகிறது. இந்த வயதிலும், இவர் விளையாடும் போது துடிப்புடனும், […]

ஐரோப்பா

ஈராஸ்மஸ் திட்டத்தில் மீண்டும் இணையும் பிரித்தானியா : பிரக்ஸிட்டில் இணைவதற்கான அறிகுறியா?

  • December 20, 2024
  • 0 Comments

Erasmus (ஈராஸ்மஸ்)  மாணவர் பரிமாற்ற திட்டத்தில் UK மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை பிரித்தானிய பிரதமர்  Sir Keir Starmer நிராகரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Erasmus இல் மீண்டும் இணைவதற்கான அழைப்புகள் பிரித்தானியாவில் பெருகி வருகின்றன. இது ஐரோப்பா முழுவதும் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டில் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. பிரெக்ஸிட்டிற்குப் பிறகு இளைஞர்களின் நடமாட்டம் குறித்த வளர்ந்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யும் […]

செய்தி

அமெரிக்காவிலிருந்து 270,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்

  • December 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து 270,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டில் இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் மில்லியன் கணக்கான குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிவரும் நிலையில் இந்தக் கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிநுழைவுத்துறையின் அந்தத் தகவல் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமைத்துவத்தின்கீழ் வெளியான கடைசி ஆண்டறிக்கையாகும். அது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் தெற்கு எல்லையைக் கடந்து அந்நாட்டுக்குள் நுழைந்தவர்கள் என்று […]

ஆப்பிரிக்கா செய்தி

ஆபிரிக்காவை உலுக்கிய சிடோ புயல் – 73 பேர் மரணம்

  • December 20, 2024
  • 0 Comments

கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் குடியரசில் சிடோ புயல் 73 பேரைக் கொன்றது. சூறாவளியின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 543 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய இடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. 24 மணித்தியாலங்களில் மணிக்கு 260 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும், சுமார் 250 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அந்நாட்டு அரசாங்கம் 02 அவசர விடுதி நிலையங்களை நிறுவியுள்ளது. மேலும், […]

இலங்கை

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் இலங்கை மத்திய வங்கி!

  • December 20, 2024
  • 0 Comments

மத்திய வங்கியின் (CB) பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு வெளியிலிருந்து பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உத்தரவுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சில இடைநிறுத்தங்கள்/கட்டுப்பாடுகளை மேலும் திருத்துவதன் மூலம் ஜூன் 2025 வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய உத்தரவுகளை வழங்குவது பொருத்தமானது என இலங்கை மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி, திட்டமிடல் […]

அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள்

பூமியைக் கடந்து செல்லும் மிகப்பெரிய வீடு அளவிலான சிறுகோள்கள் – நாசா எச்சரிக்கை

  • December 20, 2024
  • 0 Comments

எதிர்வரும் 21ஆம் திகதி ஆஸ்டிராய்டு எனப்படும் மிகப்பெரிய இரண்டு சிறுகோள்கள் பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மிகப்பெரிய வீடு அளவிலான ஆஸ்டிராய்டு எனப்படும் இரண்டு மிகப்பெரிய சிறுகோள்கள் பூமியைக் கடந்து செல்லும் என எச்சரித்துள்ளது. இவை இரண்டும் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கக்கூடும். இருப்பினும், இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இவ்விரண்டு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்வே பாலத்துடன் மோதிய பேருந்து : 08 பேர் படுகாயம்!

  • December 20, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ரயில்வே பாலத்தின் மீது இரட்ட மாடி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பேருந்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், இதில் காயமுற்ற 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக காயமுற்ற 08 பேருக்கும் ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.