ஐரோப்பா

பிரான்ஸில் நடத்தப்பட்ட பலாத்கார வழக்கு ; டொமினிக் பெலிகாட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

  • December 20, 2024
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இருப்பினும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்ற ஆண்களுக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணான கிசெல் பெலிகாட்டின் பிள்ளைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது உலக அளவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிசெல் பெலிகாட், துணிவின் அடையாளமாக தற்போது பார்க்கப்படுகிறார். […]

ஆன்மிகம்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய ஹிமாலியின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்!

  • December 20, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய  ஹிமாலி அருணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், பணிப்பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதில் எவ்வித மோசடியும் செய்யவில்லை என தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக திருமதி ஹிமாலி அருணாதிலக்க தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் […]

பொழுதுபோக்கு

மகாராஜா இயக்குனருக்கு அடித்த அதிஷ்டம்

  • December 20, 2024
  • 0 Comments

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. ஒரு அப்பாவிற்கும், மகளுக்குமான பிணைப்பை ஆழமாக எடுத்து இந்த சமூகத்திற்கு காட்டியிருக்கிறது. தனது மகளுக்காக பாதிக்கப்பட்ட தந்தையாக போராடும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். தனது 50வது படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி விஜய் சேதுபதி நடித்த படம் கடந்த ஜுன் 14ம் தேதி திரைக்கு வந்தது. ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகளவில் ரூ. […]

இலங்கை

இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்களை மீளாய்வு செய்யும் ஐ.எம்.எஃப்!

  • December 20, 2024
  • 0 Comments

இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு IMF நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட உள்ளது. இந்த மதிப்பீட்டின் முழு விவரங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் அறிக்கையில் சேர்க்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக் தெரிவித்தார்.

செய்தி

இலங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சிக்கி தவித்த வெளிநாட்டு தம்பதி மீட்பு

  • December 20, 2024
  • 0 Comments

ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியொருவர் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தின் உயிர்காக்கும் குழுவினால் இது மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரஷ்ய தம்பதியினர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முதலுதவி செய்துவிட்டு ரஷ்ய தம்பதி அங்கிருந்து வெளியேறினர்.

ஆசியா

இந்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு

  • December 20, 2024
  • 0 Comments

இந்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான முக்கியமான பொதுவான புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை விரைவில் மீட்டெடுக்கவும் இரு தரப்பும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெய்ஜிங், ஒருவருக்கொருவர் அடிப்படைத் தேவைகள் மற்றும் முக்கிய நலன்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும், உரையாடல் மற்றும் தொடர்பு மூலம் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டியதன் […]

இலங்கை

இந்திய எண்ணெய் குழாய்களை இலங்கையில் அமைப்பது தொடர்பில் எட்டப்பட்ட உடன்பாடு!

  • December 20, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கடைசி இந்திய விஜயத்தின் போது, ​​நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து வெளியான தகவல்

  • December 20, 2024
  • 0 Comments

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பொழுதுபோக்கின் போது ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ரக்பியை உலகின் மிக ஆபத்தான பொழுது போக்கு என பெயரிட்டுள்ளது. கால்பந்து உலகின் இரண்டாவது ஆபத்தான பொழுதுபோக்காக கருதப்படுகிறது மற்றும் ஸ்கைடிவிங் உலகின் மூன்றாவது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக உள்ளது. […]

பொழுதுபோக்கு

விடுதலை 2 படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் விமர்சனம்

  • December 20, 2024
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சூரி கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பின்னர் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். விடுதலை 2 திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல் : NHS விடுத்துள்ள எச்சரிக்கை!

  • December 20, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஃப்ளூ காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். என்ஹெச்எஸ் இங்கிலாந்து தரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் அளவு கடந்த ஆண்டின் உச்சத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,629 காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இவர்களில் 125 பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் பள்ளி மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் வைரஸ் பரவல் […]