இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் : ஐ.நா

  • November 25, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கணவன்/காதலன் அல்லது உறவினரால் கொல்லப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் பெண் கொலைகள் “அபயகரமான அளவில்” இருப்பதாக வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் UN Women நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 சதவீதம் அல்லது 51,000 க்கும் மேற்பட்ட […]

ஆசியா செய்தி

வங்கதேசத்தில் இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது

  • November 25, 2024
  • 0 Comments

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதில் இருந்து பரவலான அரசியல் வன்முறைகளைக் கண்ட வங்கதேசத்தில் சிறுபான்மை உரிமைகள் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் இந்து மதகுருவும் மத சிறுபான்மைத் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி டாக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்காவில் இருந்து வடக்கே 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள ரங்பூர் நகரில், வலுவான சட்டப் பாதுகாப்பு கோரி இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் “சக பக்தர்களுக்கு எதிரான அட்டூழியங்கள்” […]

இலங்கை செய்தி

தனிப்பட்ட பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா இராமநாதன்!

  • November 25, 2024
  • 0 Comments

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அர்ச்சுனா இராமநாதன் ​​பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து நகர மறுத்துவிட்டார். அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற புதிதாக […]

உலகம் செய்தி

ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!

  • November 25, 2024
  • 0 Comments

முன்னாள் பிரதமரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்ரான் கான், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார், மேலும் அவர் மீது 150 குற்றவியல் வழக்குகள் உள்ளன. ஆனால் அவருக்கும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும் மக்களிடையே இப்போதும் ஆதரவு உள்ளது. அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இம்ரான் கான் […]

இலங்கை செய்தி

கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை

  • November 25, 2024
  • 0 Comments

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் (26/27) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர அவர்கள் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த (உ/த) பரீட்சை நிலையங்களாக அமையாத […]

இலங்கை செய்தி

மீண்டும் UNP + SJB இணைப்பா ?

  • November 25, 2024
  • 0 Comments

இரண்டாக பிளவு பட்டு கைக்கு எட்டிய வெற்றிகளை தாரை வார்த்த இலங்கையின் பழம் பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு சிலரின் கருத்தாக இருந்த இவ்விடயம் இரு தலைவர்களையும் ஒன்று சேர்த்து பேச வைக்கும் முயற்சியாக பரிணமித்து உள்ளதாக இக்கட்சிகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் ராஜகருணா உட்பட சிலர் ஈடுபட்டு வருவதாகவும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய ராணுவத்தின் தரம் குறைந்துவிட்டது : நேட்டோ அதிகாரி

  • November 25, 2024
  • 0 Comments

பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பை நடத்தியதை விட இப்போது ரஷ்யாவின் தரைப்படைகள் பெரியதாக உள்ளன, ஆனால் அதன் தரம் குறைந்துவிட்டது என்று நேட்டோ உயர் இராணுவ அதிகாரி தெரிவித்தார். “அந்தப் படைகளின் தரம் குறைந்துவிட்டது” என்று நேட்டோவின் இராணுவக் குழுவின் தலைவரான டச்சுக்காரர் அட்மிரல் ராப் பாயர், படையின் உபகரணங்களின் நிலை மற்றும் அதன் வீரர்களின் பயிற்சியின் நிலை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். “இந்த நேரத்தில், ரஷ்யர்கள் பிப்ரவரி 2022 இல் […]

இலங்கை செய்தி

இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

  • November 25, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் துணை இராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் இன்று (25) கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளாவது, காசாவிலும் லெபனானிலும் சியோனிச ஆட்சி போர்க்குற்றம் செய்துள்ளது. தற்போது அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது, இது போதாது. நெதன்யாகு மற்றும் இந்த ஆட்சியின் கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை […]

இலங்கை செய்தி

சஜித்தின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா மன்னிப்பு கோரினார்

  • November 25, 2024
  • 0 Comments

10வது பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர் திரு.அர்ச்சுனா இராமநாதன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் அவர் மன்னிப்பு கோரினார். அவர் மேலும் கூறியதாவது, “நான் எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன். எந்த இடத்திலும் உட்காருங்க என்றார். இதனால் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்று நினைத்தேன். அப்போது நால்வர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலைக்கு தீர்வு

  • November 25, 2024
  • 0 Comments

கலிபோர்னியாவில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையின் முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் திகதி நடந்த கொலையின் மர்மத்தை டிஎன்ஏ பரிசோதனை மூலம் விசாரணைக் குழு தீர்த்து வைத்தது. அப்போதுதான் 17 வயதான எஸ்தர் கோன்சாலஸ் தனது சொந்த வீட்டிலிருந்து கலிபோர்னியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் தனது சொந்த வீட்டிற்கு திரும்பவில்லை. மறுநாள் கலிபோர்னியாவின் ஸ்னோபார்க் அருகே ஒரு நெடுஞ்சாலையில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது அவரது […]